என் மலர்

  மொபைல்ஸ்

  அடுத்த வாரம் இந்தியா வரும் புது மோட்டோ ஸ்மார்ட்போன்?
  X

  அடுத்த வாரம் இந்தியா வரும் புது மோட்டோ ஸ்மார்ட்போன்?

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மோட்டோரோலா நிறுவனத்தின் புது E13 ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகிறது.
  • சமீபத்தில் மோட்டோ E13 ஸ்மார்ட்போன் ஐரோப்பா மற்றும் இதர பகுதிகளில் அறிமுகம் செய்யப்பட்டது.

  மோட்டோரோலா நிறுவனம் கடந்த வாரம் தனது மோட்டோ E13 ஸ்மார்ட்போனினை ஐரோப்பா மற்றும் இதர நாடுகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இதுவரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படவில்லை. இந்த நிலையில், புதிய மோட்டோ E13 ஸ்மார்ட்போன் இந்திய வெளியீடு பற்றிய புது தகவல் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.

  பிரபல டிப்ஸ்டர் முகுல் ஷர்மா வெளியிட்டு இருக்கும் தகவல்களில், இந்திய சந்தையில் புது மோட்டோ E13 ஸ்மார்ட்போன் பிப்ரவரி 8 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என தெரிவித்து இருக்கிறார். மேலும் இந்த ஸ்மார்ட்போன் ரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டில் விற்பனைக்கு வரும் என அவர் மேலும் தெரிவித்தார். அந்த வகையில், மோட்டோ E13 விலை ரூ. 10 ஆயிரத்திற்கும் குறைவாகவே நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது.

  மோட்டோ E13 அம்சங்கள்:

  மோட்டோ E13 ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் IPS LCD டிஸ்ப்ளே, HD+ ரெசல்யூஷன், யுனிசாக் டைகர் T606 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எண்ட்ரி லெவல் பிராசஸரில் இரண்டு ARM கார்டெக்ஸ் A75 கோர்கள், ஆறு ARM கார்டெக்ஸ் A55 கோர்கள் உள்ளன. தோற்றத்தில் இந்த ஸ்மார்ட்போன் டூயல் கேமரா கொண்டிருப்பதை போன்று காட்சியளிக்கிறது.

  எனினும், மோட்டோ E13 மாடலில் 13MP பிரைமரி கேமரா மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் எல்இடி ஃபிலாஷ் மற்றும் 5MP செல்ஃபி கேமரா உள்ளது. புது மோட்டோ E13 ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. மேலும் 10 வாட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

  டூயல் சிம் கார்டு வசதி, ப்ளூடூத் 5.0 கனெக்டிவிட்டி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, 3.5mm ஹெட்போன் ஜாக் உள்ளது. ஐரோப்பாவில் புதிய மோட்டோ E13 ஸ்மார்ட்போனின் விலை 119.99 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 10 ஆயிரத்து 600 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

  Next Story
  ×