search icon
என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    வேற லெவல் அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் அறிமுகமான நோட் 40 ப்ரோ சீரிஸ்
    X

    வேற லெவல் அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் அறிமுகமான நோட் 40 ப்ரோ சீரிஸ்

    • பிரைமரி கேமராவுடன் மூன்று கேமரா சென்சார்கள் உள்ளன.
    • மீடியாடெக் டிமென்சிட்டி 7020 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.

    இன்பினிக்ஸ் நிறுவனத்தின் நோட் 40 ப்ரோ பிளஸ் 5ஜி மற்றும் நோட் 40 ப்ரோ 5ஜி மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன. இரு மாடல்களிலும் மீடியாடெக் டிமென்சிட்டி 7020 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கின்றன.

    இத்துடன் இன்பின்க்ஸ் நிறுவனத்தின் சொந்த சீட்டா X1 பவர் மேனேஜ்மெண்ட் சிப் வழங்கப்பட்டு இருக்கிறது. இரு மாடல்களிலும் கர்வ்டு AMOLED டிஸ்ப்ளே, 108MP பிரைமரி கேமராவுடன் மூன்று கேமரா சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளன.


    இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ 5ஜி மாடலில் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 45 வாட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ பிளஸ் மாடலில் 4600 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 100 வாட் சார்ஜிங் வழங்கப்படுகிறது.

    முன்னதாக இரு மாடல்களும் மார்ச் மாத வாக்கில் தேர்வு செய்யப்பட்ட நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தற்போது இந்த மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ பிளஸ் 5ஜி மாடலின் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 24 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அப்சிடியன் பிளாக் மற்றும் வின்டேஜ் கிரீன் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.

    இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ 5ஜி மாடலின் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 21 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் வின்டேஜ் கிரீன் மற்றும் டைட்டன் கோல்டன் நிறங்களில் கிடைக்கிறது. இரு மாடல்களும் ப்ளிப்கார்ட் வலைதளத்தில் விற்பனை செய்யப்படுகின்றன.

    Next Story
    ×