search icon
என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    இனி ஒன்பிளஸ் சாதனங்களை கடைகளில் விற்க மாட்டோம் - விற்பனையாளர்கள் கூட்டமைப்பு?
    X

    இனி ஒன்பிளஸ் சாதனங்களை கடைகளில் விற்க மாட்டோம் - விற்பனையாளர்கள் கூட்டமைப்பு?

    • ஒன்பிளஸ் நிறுவன சாதனங்கள் எதுவும் விற்பனை செய்யப்பட மாட்டாது.
    • ஏராளமான சிக்கல்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    ஒன்பிளஸ் நிறுவன சாதனங்களை ஆஃப்லைன் கடைகளில் விற்பனை செய்ய மாட்டோம் என்று இந்தியாவின் ஒருங்கிணைந்த சில்லறை விற்பனையாளர்களின் கூட்டமைப்பு தெரிவித்து இருக்கிறது. இந்த அறிவிப்பை தொடர்ந்து மே 1 ஆம் தேதியில் இருந்து நாடு முழுக்க பெரும்பாலான முன்னணி ஆஃப்லைன் ஸ்டோர்களில் ஒன்பிளஸ் நிறுவன சாதனங்கள் எதுவும் விற்பனை செய்யப்பட மாட்டாது.

    இது தொடர்பாக வெளியாகி இருக்கும் தகவல்களின் படி, இந்திய சில்லறை விற்பனையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் ஒன்பிளஸ் டெக்னாலஜி இந்தியா விற்பனை பிரிவு இயக்குநர் ரஞ்சித் சிங்கிற்கு கடிதம் எழுதப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கடிதத்தில் விற்பனை தொடர்பாக ஏராளமான சிக்கல்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்ததாக தெரிகிறது.

    இந்தியாவில் ஆஃப்லைன் ஸ்டோர்களில் ஒன்பிளஸ் சாதனங்களை விற்பனை செய்யும் போது மிக குறைந்த லாபம் கிடைப்பதாகவும், வாரண்டி தொடர்பான சேவைகளில் கால தாமதம் ஏற்படுவதால் வாடிக்கையாளரகள் பெருமளவில் பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இது போன்ற காரணங்களால் விற்பனை மோசமாக இருப்பதாக தெரிகிறது.

    இதனால் மே 1 ஆம் தேதி முதல் குஜராத், மகாராஷ்டிரா, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா மற்றும் தமிழ் நாடு போன்ற மாநிலங்களில் உள்ள சுமார் 4 ஆயிரத்து 500 ஆஃப்லைன் ஸ்டோர்களில் ஒன்பிளஸ் சாதனங்களை விற்பனை செய்வதில்லை என சில்லறை விற்பனையாளர்கள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதுதவிர இம்மாத இறுதிக்குள் இந்த பிரச்சினைகள் குறித்து தீர்வு காண இந்திய சில்லறை விற்பனையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் வலியுறுத்தப்பட்டு இருப்பதாக தெரிகிறது. இது தொடர்பாக ஒன்பிளஸ் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.

    Next Story
    ×