என் மலர்
டென்னிஸ்

அல்காரஸ்
ஏடிபி டென்னிஸ் தரவரிசை - கார்லோஸ் அல்காரஸ் முதலிடம் பிடித்து அசத்தல்
- ஏடிபி டென்னிஸ் தரவரிசையில் ஜோகோவிச் இரண்டாமிடத்தில் உள்ளார்.
- ரபேல் நடால் தற்போது 13-ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்
லண்டன்:
அமெரிக்காவில் நடைபெற்ற இண்டியன்வெல்ஸ் டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை கார்லோஸ் அல்காரஸ் கைப்பற்றினார்.
இந்நிலையில், சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது.
இந்த தரவரிசை பட்டியலில் கார்லோஸ் அல்காரஸ் முதலிடம் பிடித்துள்ளார். நோவக் ஜோகோவிச் இரண்டாமிடத்தில் உள்ளார்.
சிட்சிபாஸ் மூன்றாமிடமு, காஸ்பர் ரூட் நான்காம் இடமும், மெத்வதேவ் 5ம் இடமும் பிடித்துள்ளனர்.
தரவரிசையின் முதல் 10 இடன்களில் இருந்து முதல் முறையாக ரபேல் நடால் வெளியேறியுள்ளார். அவர் தற்போது 13ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
Next Story