search icon
என் மலர்tooltip icon
    TNLGanesh

    About author
    அச்சு ஊடக துறையில் 12 வதுஆண்டு பயணம். மலை பயணமும்,மழையில் பயணமும் பிடித்தமான ஒன்று. படைப்பியலில் அதிக ஆர்வம் . இயற்கையின் அழகை தனிமையில் ரசிக்க பிடிக்கும். நகர்வுகளை கண்டறிய பிடிக்கும். நான் தமிழின் மூத்த மகன் என்பதில் பெருமை.
      • தோரணமலை முருகன் கோவில் சித்தர்கள், முனிவர்கள் வழிபட்ட புராண சிறப்புடையதாகும்.
      • கிரிவலப்பாதை முழுவதும் மூலிகைகள் நிறைந்திருப்பதால் உற்சாகம் ஏற்படுவதாக பக்தர்கள் கூறினர்.

      கடையம்:

      தென்காசி-கடையம் சாலையில் அமைந்துள்ளது தோரணமலை முருகன் கோவில். இக்கோவில் சித்தர்கள், முனிவர்கள் வழிபட்ட புராண சிறப்புடையதாகும். தோரணமலையில் கார்த்திகை மாத பவுர்ண மியை முன்னிட்டு ஆயிரக் கணக்கான பக்தர்கள் கிரிவலம் செய்த னர். கிரிவலப்பாதை முழுவதும் மூலிகைகள் நிறைந்தி ருப்பதால் கிரிவலம் சென்ற பக்தர்கள் உற்சாகம் ஏற்படுவதாக கூறினர்.

      மேலும் கிரிவலம் முடிந்த பின்பு உத்தர்காண்டு மாநிலத்தில் சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்கள் நலமுடன் மீண்டு வர சிறப்பு கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது. கிரிவலத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் காலை அன்னதானம் மற்றும் சிறப்பு பிரசாதங்கள் வழங்கப் பட்டது.

      நிகழ்ச்சி ஏற்பாடுகளை தோரணமலை பரம்பரை அறங்காவலர் செண்பக ராமன் செய்திருந்தார்.

      • அச்சம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழையால் பல வீடுகள், சாலைகள் சேதமடைந்தன.
      • மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.

      சங்கரன்கோவில்:

      சங்கரன்கோவில் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட மேல இலந்தை குளம், மூவிருந்தாளி, அச்சம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கன மழையால் பல வீடுகள், சாலைகள் சேதமடைந்தன.

      இந்நிலையில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க.செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்து பொது மக்களுக்கு நிதி உதவி மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கினார். தொடர்ந்து அரசு அதிகாரிகளிடம் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

      அதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த ராஜா எம்.எல்.ஏ. அரசின் மூலம் வழங்கப் படும் உதவிகள் அனைத்தும் விரைவில் வழங்க ஏற்பாடு செய்ய படும் என தெரிவித்தார். அதற்கு பாதிக்கப்பட்ட மக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

      ஆய்வின் போது ஒன்றிய செயலாளர்கள் வெற்றி விஜயன், பெரியதுரை, மானூர் யூனியன் சேர்மன் ஸ்ரீலேகா அன்பழகன், அச்சம்பட்டி ஊராட்சி தலைவர் அல்லி துரை சண்முகதாய், மூவிருந்தாளி ஊராட்சி தலைவர் வெள்ள பாண்டியன், சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் வீமராஜ், மாவட்ட பொறி யாளர் அணி அமைப்பாளர் பசுபதி பாண்டியன், மூவிருந்தாளி கிளை செயலாளர் ஜோசப், மற்றும் அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

      • பேரணியை மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
      • பேரணியில் கலந்து கொண்டவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி கோஷமிட்டபடி சென்றனர்.

      தென்காசி:

      தென்காசியில் சமூகநலத்துறை சார்பில் சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் மற்றும் வரதட்சணை தடுப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி, மாவட்ட சமூக நல அலுவலர் மதி வதனா, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ராமசுப்பிர மணியம் ஆகியோர் உடன் இருந்தனர். அனைவரும் பாலின வன்முறை தவிர்த்தலுக் கான உறுதிமொழி ஏற்றனர்.

      இந்த பேரணியில் வரதட்சணையை ஒழிப்போம். பாலின வன்முறைக்கு எதிராக குரல் கொடுப்போம். பெண்களை இழிவுபடுத்தும் செயல்களை புறக்கணிப்போம், பெண்களுக்கான உதவி எண் 181 என்பது குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திக்கொண்டு கோஷமிட்டபடி சென்றனர். பேரணியில் சகி ஒன் ஸ்டாப் சென்டர் மைய நிர்வாகி ஜெயராணி, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரத்னபால் சாந்தி, பெண்கள் மேம்பாட்டு ஒருங்கிணைப்பாளர் புஷ்பராஜ், சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர்கள், ஊர்நல அலுவலர்கள், ஒன் ஸ்டாப் சென்டர் பணியா ளர்கள், குழந்தைகள் பாதுகாப்பு அலகு பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

      • மாணவ-மாணவிகளை ஊக்கப் படுத்தும் வகையில் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடைபெற்றது.
      • போங் விசேட் பைத்தூன், ஸ்மார்ட் வகுப்பறையை தொடங்கி வைத்து பேசினார்.

      ஆலங்குளம்:

      ஆலங்குளம் அருகே சிவலார்குளத்தை சேர்ந்தவர் வெங்கடாச்சலம். இவர் ஆந்திராவில் சி.பி.எப். நிறுவனத்தின் விற்பனை பிரிவு துணை தலைவராக உள்ளார். இவர் தான் படித்த பள்ளிக்கு உதவிடும் வகையில் தான் பணிபுரிந்து வரும் நிறுவனத்தின் சார்பில் நல்லூர் மேற்கு திருநெல்வேலி மேல்நிலைப்பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை உருவாக உதவி செய்துள்ளார்.

      நல்லூர் மேற்கு திருநெல்வேலி மேல்நிலைப்பள்ளியில் சி.பி.எப். இந்தியா நிறுவனம் சார்பில் ஸ்மார்ட் வகுப்பறைக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் கல்வியில் சிறந்த மாணவ-மாணவிகளை ஊக்கப் படுத்தும் வகையில் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடைபெற்றது. பள்ளி தாளாளர் ஆல்வின் பாலன் தலைமை தாங்கினார். நெல்லை மாநகராட்சி துணை மேயர் கே.ஆர்.ராஜூ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். சி.பி.எப். நிறுவனத்தின் சேர்மன் போங் விசேட் பைத்தூன், ஸ்மார்ட் வகுப்பறையை தொடங்கி வைத்து ஸ்மார்ட் வகுப்பறைக்கு தேவையான உபகரணங்களை வழங்கி பேசினார்.

      இந்த விழாவில் சி.பி.எப். நிறுவனத்தின் துணை சேர்மன் குவான் சைபிரேம், சி.பி.எப். நிறுவனத்தின் தலைவர் சிரபோங்க் பொங்சா, துணை தலைவர் சைரட் அன்சரி பைக்கான், சீனியர் துணை தலைவர் சித்திசாய் சீஹோ, ஆந்திரா விற்பனை பிரிவு துணை தலைவர் வெங்கடாச்சலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் வசந்தி ஜான்சி ராணி வரவேற்றார். பள்ளியில் ரிப்பன் வெட்டி ஸ்மார்ட் வகுப்பறையை தொடங்கி வைத்து பார்வையிட்டனர். பள்ளி மாணவ -மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

      • கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது.
      • கூட்டத்தின்போது தொகுதி வாரியாக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

      தென்காசி:

      தென்காசி மாவட்ட பாரதீய ஜனதா கட்சி சார்பில், மாவட்ட தலைமை அலுவலகத்தில், பாராளுமன்ற தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ராஜேஷ் ராஜா தலைமை தாங்கினார். மாவட்ட பொதுசெயலாளர் பாலகுருநாதன், மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட பார்வையாளர் மகாராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. கூட்டத்தில் வருகிற பாராளுமன்ற தேர்தல் தயாரிப்பு பணி சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டது. சட்டமன்ற தொகுதி வாரியாக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

      • பள்ளி மாணவர்களுக்கு புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர் மீது குண்டர் சட்டம் பாயும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்திருந்தார்.
      • சிவக்குமார் என்ற பொன்பாண்டி, தங்கராசு ஆகியாரின் கடைகளில் போலீசார் அதிரடியாக சோதனை செய்தனர்.

      தென்காசி:

      தென்காசி மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் விற்பனை செய்த நபர் மீது குண்டர் சட்டம் பாயும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் எச்சரிக்கை விடுத்திருந்தார். மேலும் புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பாக ஏதேனும் புகார் தெரிவிக்க வேண்டும் என்றால் நேரடியாக புகார் அளிக்கலாம் என்றும் தெரிவித்து இருந்தார்.

      இந்தநிலையில் பாவூர்சத்திரம் அருகே மேலப்பட்டமுடையார்புரம் கிராமத்தில் உள்ள கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக பாவூர்சத்திரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி மேலப்பட்ட முடையார்புரம் நாடார் நடுத்தெருவை சேர்ந்த நயினார் என்பவர் மகன் சிவக்குமார் என்ற பொன்பாண்டி (வயது 51), தேவர் நடுத்தெருவை சேர்ந்த தங்கராசு(36) ஆகியாரின் கடைகளில் போலீசார் அதிரடியாக சோதனை செய்தனர். அப்போது அங்கு புகையிலை பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். 

      • காசி விஸ்வநாதர் கோவில் முன்பு சிறப்பு பூஜைகளுடன் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
      • செங்கோட்டை சுற்றுப்பகுதியில் பல்வேறு கோவில்களில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

      தென்காசி:

      கார்த்திகை திருநாளையொட்டி நெல்லை, தென்காசி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

      தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் முன்பு சிறப்பு பூஜைகளுடன் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதேபோன்று கீழப்பாவூர் மைதானத்தில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

      இதேபோல் பாவூர்சத்திரம் முப்புடாதி அம்மன் கோவிலில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. சொக்கபனையை ஏற்றும் நிகழ்ச்சியை தொழிலதிபர் ஆர்.கே. காளிதாசன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

      கடையநல்லூர் தினசரி மார்க்கெட் அருகே பிரசித்தி பெற்ற ஸ்ரீ முப்புடாதி அம்மன் கோவிலில் நேற்று இரவு செக்கப்பனை கொளுத்தப்பட்டது. இதுபோன்று கடையநல்லூரில் உள்ள முத்துகிருஷ்ணாபுரம் முத்தாரம்மன் கோவில், கிருஷ்ணாபுரம் முப்புடாதி அம்மன் கோவில், கருப்பசாமி கோவில், மேல கடையநல்லூர் கட காளீஸ்வரர் கோவில், அண்ணாமலைநாதர் கோவில், பண்பொழி திருமலை குமாரசுவாமி கோவில் ஆகிய கோவில் களில் சொக் கப்பனை கொளுத்தப் பட்டது.

      செங்கோட்டை சுற்றுப்பகுதியில் உள்ள சிவன்கோவில், பிள்ளையார் கோவில், முப்புடாதி அம்மன் கோவில், காளியம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சாலையில் அமைக்க பெற்ற சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

      சிவகிரி அருகே கூடலூர் நாதகிரி ஸ்ரீபாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு கூடலூர் அன்னதான அறக்கட்டளை சார்பில் ஊர் தலைவர் குருசாமி பாண்டியன் அன்னதானத்தை தொடங்கி வைத்தார். அய்யப்பா சேவா சங்கம் சார்பில் பரதநாட்டியம் நிகழ்ச்சி நடைபெற்றது.

      சிறப்பு அழைப்பாளராக யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன் கலந்து கொண்டார். ஒன்றிய கவுன்சிலர் அருணாதேவி பாலசுப்பிரமணியன், நாச்சியார் அன்கோ, அரசு ஒப்பந்ததாரர் விஜயகுமார், ஊர் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். சிவகிரி கூடாரப்பாறை ஸ்ரீபால சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மூலவருக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனை நடந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிவகிரி ஜமீன்தார் விக்னேஷ் ராஜா குடும்பத்தினர் செய்து இருந்தனர். சிவகிரியில் கருப்பாயி நாச்சியார் அறக்கட்டளைக்கு பாத்தி யப்பட்ட வள்ளி, தெய்வானை ஆறுமுகம் நயினார் கோவில் முன்பாக சொக்கப்பனை தீபம் ஏற்றி வைக்கப்பட்டது.

      முக்கூடல் ஸ்ரீமுத்துமாலை கோவில், நாராயணசாமி கோவில், சடையப்பபுரம் சக்தி விநாயகர் கோவில், சந்தன மாரியம்மன் கோவில் மற்றும் பல கோவில்களில் திருக்கார்த்தி கை சொக்கப்பனை தீபம் ஏற்றப்பட்டது.

      சேரன்மகாதேவி கொளுந்து மாமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் மலை உச்சியில் 2 தீபம் ஏற்றப்பட்டது.

      ஆலங்குளம் அருகே உள்ள குருவன் கோட்டை மாரியம்மன் கோவில் முன்பு நேற்று இரவு கார்த்திகை தினத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. அதனை தொடர்ந்து சொக்க பனை கொளுத்தப்பட்டது. உச்சியில் இருந்த மாவிளக்கை வெப்பத்தையும் பொருட்படுத்தாமல் குருவன் கோட்டையை சேர்ந்த வாலிபர் ஒருவர் வேகமாக பனையில் ஏறி பின்பு சாகவாசமாக அமர்ந்து மாவிளக்கை எடுத்து கீழே எடுத்து வந்தார். இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

      • தோரணமலையில் குடும்ப மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.
      • போட்டியில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

      கடையம்:

      மாரத்தான் போட்டி உலகம் முழுவதும் நடத்தப் படும் ஒரு விளையாட்டு. இந்த போட்டிகள் ஒலிம்பிக் போட்டிகளில் இணைக்கப்பட்டு தொடர்ந்து நடந்து வருகிறது.

      பெரும்பாலும் சர்வ தேச போட்டிகளில் மினி மாரத்தான் போட்டிகளுக் கான தூரம் 10 கிலோ மீட்டர் என நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது. வெற்றியை சொல்ல ஓடிய இந்த போட்டியில் பங்கேற்றால் உடல் நலம் சிறப்படையும் என்பதோடு வாழ்வில் வெற்றியை காணலாம் என்ற நம்பிக்கை பலருக்கு உண்டு.

      மேலும் தற்போது உலகம் முழுவதும் ஏதாவது ஒரு குறிக்கோளுடன் இந்தப் போட்டி நடத்தப்படுகிறது. அந்த வகையில் இன்று தென்காசி அருகே கடையம் தோரணமலையில் குடும்ப மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. உன்னதமான உணவு முறையுடன் ஆரோக்கியத்தை பேணு வதை வலியுறுத்தும் வகையில் இந்த மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.

      மாரத்தான்

      இதனை எம்.கே.வி.கே. தொண்டு நிறுவனம், தோரணமலை முருகன் கோவில் நிர்வாகம் இணைந்து நடத்தியது. காலை 6 மணி அளவில் தென்காசி அருகே மத்தளம் பாறையில் உள்ள ஷோகோ நிறுவனம் முன்பு போட்டி தொடங்கியது. இதில் மாணவர்கள் இளைஞர்கள் என 100-க்கும் மேற்பட்ட வர்கள் கலந்து கொண்டு ஓடினர். இதில் இளம் பெண்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

      10 கிலோ மீட்டர்

      போட்டியை தென்காசி இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தொடங்கி வைத்தார்.

      ஓட்டப்பந்தய வீரர்கள் திரவியநகர், மாதாபுரம் செக்போஸ்ட், கானாவூர், வழியாக தோரணமலையை அடைந்தனர். அவர்கள் மொத்தம் 10 கிலோ மீட்டர் தூரம் ஓடி வெற்றி எல்லையை அடைந்தனர். கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் டி.சர்ட், சான்றிதழ், பதக்கம் வழங்கப்பட்டது.

      பரிசளிப்பு

      விழாவில் தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச் சந்திரன் கலந்து கொண்டு போட்டியில் பங்கேற்ற வர்களுக்கு பரிசு களை வழங்கினார். முன்னதாக போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் தோரணமலையில் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது.

      போட்டியில் முதலிடம் வந்த மாரிசரத் ரூ.10 ஆயிரம் பரிசை பெற்றார். 2-வதாக வந்த அஜித்குமார் ரூ.5 ஆயிரமும், 3-வது வந்த பத்ரி நாராயணன் ரூ.3 ஆயிரமும் பரிசாக பெற்றனர்.

      இதற்கான ஏற்பாடுகளை எம்.கே.வி.கே. தொண்டு நிறுவனம் பாலமுருகன், தோரணமலை பரம்பரை அறங்காவலர் செண்பக ராமன் ஆகியோர் செய்து இருந்தனர்.

      • தி.மு.க. மாணவர் அணி கருத்தரங்கில் பங்கேற்க தி.மு.க. துணை பொது செயலாளர் ஆ.ராசா எம்.பி. தென்காசி மாவட்டத்திற்கு வந்தார்.
      • சங்கரன்கோவிலுக்கு வருகை தந்த ஆ.ராசா எம்.பி.க்கு ராஜா எம்.எல்.ஏ. தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

      சங்கரன்கோவில்:

      தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் நடைபெற்ற தி.மு.க. மாணவர் அணி கருத்தரங்கில் பங்கேற்க தி.மு.க. துணை பொது செயலாளர் ஆ.ராசா எம்.பி. தென்காசி மாவட்டத்திற்கு வந்தார்.

      இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு சங்கரன்கோவிலுக்கு வருகை தந்த ஆ.ராசா எம்.பி.க்கு தி.மு.க. சார்பில் வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வடக்கு மாவட்ட அலுவலகத்திற்கு வந்த ஆ.ராசா எம்.பி.க்கு வீரவாள் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கப் பட்டது.

      நிகழ்ச்சியில் தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தங்கவேலு, யூ.எஸ்.டி. சீனிவாசன், பரம குரு, மாநில வர்த்தக அணி இணை செயலாளர் முத்துச் செல்வி, மாநில மருத்துவர் அணி துணை செய லாளர் செண்பகவிநாயகம், மாவட்ட அவை தலைவர் பத்மநாதன், மாவட்ட துணை செயலாளர்கள் மனோகரன், ராஜதுரை, புனிதா, பொதுக்குழு உறுப்பினர்கள் வேல்சாமி பாண்டியன், தேவதாஸ், சாகுல் ஹமீது, மாரிச்சாமி, பராசக்தி, மகேஸ்வரி, ஒன்றிய செய லாளர்கள் லாலாசங்கர பாண்டியன், பொன்.முத்தையா பாண்டியன், கடற்கரை, பூசைப்பாண்டி யன், சேர்மதுரை, வெற்றி விஜயன், பெரியதுரை, ராமச்சந்திரன்,

      மதிமாரிமுத்து, நகர செயலாளர்கள் பிரகாஷ், அந்தோணிசாமி, பேரூர் செயலாளர்கள் குரு, ருபி பாலசுப்ரமணியம், மாரி முத்து, சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன், மாவட்ட சார்பு அணி அமைப்பாளர்கள் முகேஷ் உதயகுமார், வக்கீல் பிச்சையா, கே.எஸ்.எஸ். மாரியப்பன், கிப்ட்சன், சிவசங்கரி, அப்பாஸ் அலி, விஜயா சவுந்தரபாண்டியன், மாடசாமி, பிரேம்குமார்,

      பசுபதி பாண்டியன், நாகூர்கனி, மணிகண்டன், சரவணன், சேதுராமன், அமிதாப், சாமுவேல், அழகு துரை மற்றும் இளைஞர் அணி துணை அமைப்பா ளர்கள் கார்த்திக், சரவணன் அன்சாரி, ராஜ், மணிகண்டன் ராஜராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

      • புகையிலை பொருட்களை விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
      • புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்களின் கடையும் உணவு பாதுகாப்பு அதிகாரி மூலம் சீல் வைக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

      தென்காசி:

      தென்காசி மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

      புகையிலை பொருட்கள்

      இந்நிலையில் மாவட்டத்தில் உள்ள வர்த்தக சங்கத்தினரிடம் புகையிலை பொருட்கள் விற்பனை குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எடுத்துக்கூறினார்.

      அப்போது பேசிய போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார், புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்வதுடன், அவரின் கடையும் உணவு பாதுகாப்பு அதிகாரி மூலம் சீல் வைக்கப்படும்.

      குண்டர் சட்டம் பாயும்

      பள்ளி மாணவர்களுக்கு புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டறி யப்பட்டால் விற்பனை செய்தவர் மீது குண்டர் சட்டம் பாயும் என எச்சரிக்கை விடுத்தார்.

      மேலும் புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பாக ஏதேனும் புகார் தெரிவிக்க வேண்டும் என்றால் 94981 66566 என்ற மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தொலைபேசி எண்ணிற்கு நேரடியாக புகார் அளிக்கலாம்.

      புகார் செய்பவர்களின் தகவல்கள் ரகசியம் காக்கப்படும் என கூறினார்.

      இதேபோல் அனைத்து போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வர்த்தகர்களிடமும் போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.

      • சிவகிரி காந்திஜி கலையரங்கம் முன்பாக கலைவாணர் கலைக்குழுவினரின் விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.
      • ராயகிரி பஸ் நிறுத்தம் அருகே மதுபானங்களுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.

      சிவகிரி:

      தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் அறிவுறுத்தலின் பேரில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில் சிவகிரி காந்திஜி கலையரங்கம் முன்பாக சங்கரன்கோவில் கலைவாணர் கலைக் குழு வினரின் மதுபானங்களுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.

      நிகழ்ச்சிக்கு சிவகிரி பேரூராட்சி தலைவர் கோமதி சங்கரி சுந்தர வடிவேலு, செயல் அலுவலர் வெங்கடகோபு, வருவாய் ஆய்வாளர் சுந்தரி, கிராம நிர்வாக அலுவலர் வீரசேகரன் ஆகியோர் தலைமை தாங்கினர். சங்கரன்கோவில் இன்ஸ்பெக்டர் பிலோமினா, சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

      இதில் பேரூராட்சி கவுன்சிலர்கள், அலுவலர்கள், தலையாரி அழகராஜா, தலைமை காவலர் ஸ்ரீதர கிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

      இதுபோன்று ராயகிரி பஸ் நிறுத்தம் அருகே மதுபானங்களுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் இந்திரா பூசைப்பாண்டியன், செயல் அலுவலர் சுதா, துணைத் தலைவர் குறிஞ்சி மகேஸ் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் பேரூராட்சி கவுன்சிலர்கள், அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

      • 10 நாட்கள் நடைபெற்ற திருவிழாவில் தினமும் அசன உணவு வழங்கப்பட்டது.
      • தேர்பவனி முக்கிய வீதிகளின் வழியாக சுற்றி வந்து ஆலயத்தை வந்தடைந்தது.

      ஆலங்குளம்:

      தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் பழமை வாய்ந்த உலக மீட்பர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் ஆண்டு பெருவிழா கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

      10 நாட்கள் நடைபெற்ற திருவிழாவில் தினமும் மாலை சிறப்பு திருப்பலி, இறைமக்களுக்கு அசன உணவும் வழங்கப் பட்டது. நேற்று முன்தினம் நற் கருணை பவனி நடை பெற்றது.

      விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று மாலை பங்கு ஆலயத்தில் வெய்கா லிப்பட்டி புனித ஜோசப் கல்வியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரி செயலர் அருட்பணி சகாய ஜான், பண்டாரகுளம் பங்குத் தந்தை அருட்பணி மிக்கேல் ஆகியோர் திருவிழா சிறப்பு திருப்பலியை நிறைவேற்றி னர்.

      இதைதொடர்ந்து திருத்தேர் அர்ச்சிக்கப்பட்டது. உலக மீட்பர் திரு உருவ தேர் ஆலயத்தில் இருந்து புறப்பட்ட தேர்பவனி ஆலங் குளம்-தென்காசி சாலை வழியாக அண்ணாநகர் மற்றும் ஆலங் குளத்தின் முக்கிய வீதிகளின் வழியாக சுற்றி வந்து ஆலயத்தை வந்தடைந்தது. தேர் பவனியில் இறைமக்கள் கலந்து கொண்டனர்.

      இதற்கான ஏற்பாடுகளை ஆலங்குளம் உலக மீட்பர் ஆலயம் பங்குத்தந்தை அருட்பணி எஸ்.எம்.அருள் ராஜ் மற்றும் வின்சென்ட் தே பவுல் சபை இறை மக்கள் செய்திருந்தனர்.

      ×