search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    கடந்த முறை மாதிரி எண்ணிவிடாதீர்கள்: இங்கிலாந்தை எச்சரிக்கும் முன்னாள் வீரர்
    X

    கடந்த முறை மாதிரி எண்ணிவிடாதீர்கள்: இங்கிலாந்தை எச்சரிக்கும் முன்னாள் வீரர்

    • முதல் அரையிறுதியில் ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.
    • இரண்டாவது அரையிறுதியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

    டிரினிடாட்:

    டி20 உலகக் கோப்பை தொடரில் அரையிறுதிப் போட்டிகள் நாளை நடைபெறுகின்றன. முதல் அரையிறுதியில் ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இரண்டாவது அரையிறுதியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

    இந்நிலையில், இந்தியாவை வீழ்த்த இங்கிலாந்து அசாதாரண திறமையை வெளிப்படுத்த வேண்டும் என அந்த அணியின் முன்னாள் வீரர் பால் காலிங்வுட் தெரிவித்தார். இதுதொடர்பாக காலிங்வுட் கூறியதாவது:

    இந்திய அணி இந்தத் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அதிலும் பும்ரா முழுமையான ஃபார்மில் உள்ளார்.

    வேகம், துல்லியம் மற்றும் உயர்மட்ட செயல்திறனை பும்ரா வெளிப்படுத்தி வருகிறார். எந்த அணியும் அவரது செயல்பாட்டுக்கு விடைதர முடியாத வகையில் விளையாடி வருகிறார்.

    இன்னிங்சில் 120 பந்துகள் மட்டுமே கொண்ட போட்டியில் பும்ரா மாதிரியான வீரர்கள் வீசும் அந்த 24 பந்துகள் பெரிய அளவிலான தாக்கத்தை ஆட்டத்தில் ஏற்படுத்துகின்றன.

    சவாலான, கடினமான அமெரிக்க ஆடுகளத்தில் இந்திய அணி நன்றாக விளையாடியதைப் பார்க்க முடிந்தது.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடி கேப்டன் ரோகித் சர்மா தனது திறமையை நிரூபித்துள்ளார்.

    இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது இந்த முறை இந்தியாவை வீழ்த்த இங்கிலாந்து அணி அசாதாரணமான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    கடந்த 2022-ல் ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் இந்திய அணி இங்கிலாந்திடம் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×