search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    விராட் கோலி ஓய்வா?: வைரலாகும் ஐசிசி பதிவு
    X

    விராட் கோலி ஓய்வா?: வைரலாகும் ஐசிசி பதிவு

    • டி20 உலகக் கோப்பையில் இருந்து ஆஸ்திரேலிய அணி வெளியேறியது.
    • இதையடுத்து டேவிட் வார்னர் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார்.

    டிரினிடாட்:

    டி20 உலகக் கோப்பை தொடர் வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. இந்த தொடரில் அரையிறுதி வாய்ப்பை ஆஸ்திரேலிய அணி தவறவிட்டது. சூப்பர் 8 சுற்றில் வங்காளதேச அணியிடம் மற்றும் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இந்தியாவிடம் தோல்வி அடைந்தது.

    இதனால் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் மோதிய ஆட்டத்தின் முடிவில் ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு செல்லுமா அல்லது வெளியேறுமா என்ற நிலையில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இதன்மூலம் ஆஸ்திரேலிய அணியின் அரையிறுதி கனவு கலைந்தது.

    இதையடுத்து, அந்த அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார்.

    இந்நிலையில், டேவிட் வார்னர் மற்றும் விராட் கோலி ஆகியோர் சேர்ந்திருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் வெளியிட்டுள்ள ஐசிசி, அதில் இரு சாம்பியன்கள் என பதிவிட்டுள்ளது.

    ஐ.சி.சி. வெளியிட்ட புகைப்படத்தின் மூலம் விராட் கோலி ஓய்வு பெறுகிறார் என்ற வதந்தியும் பரவி வருகிறது. இந்தப் பதிவின் மூலம் ஏற்கனவே ஓய்வை அறிவித்த வார்னருடன், விராட் கோலியும் ஓய்வை அறிவிக்க வேண்டும் என ஐசிசி வலியுறுத்துகிறதா என ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×