என் மலர்

  கிரிக்கெட்

  டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து தென் ஆப்பிரிக்கா ஆல்ரவுண்டர் பிரிடோரியஸ் விலகல்
  X

  டுவைன் பிரிடோரியஸ்

  டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து தென் ஆப்பிரிக்கா ஆல்ரவுண்டர் பிரிடோரியஸ் விலகல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இந்தியாவுக்கு எதிரான 3-வது டி20 போட்டியின் போது அவருக்கு காயம் ஏற்பட்டது.
  • கடந்த ஆண்டு டி20 உலகக்கோப்பையில் தென் ஆப்பிரிக்காவுக்காக அதிக விக்கெட் வீழ்த்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

  தென் ஆப்பிரிக்காவின் ஆல்ரவுண்டரான டுவைன் பிரிடோரியசுக்கு இடது கட்டை விரலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார்.

  இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியின் போது அவருக்கு காயம் ஏற்பட்டது. இந்தத் தொடரில் அவர் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாடினார். அந்த போட்டியில் அவர் 26 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

  கடந்த ஆண்டு டி20 உலகக்கோப்பையில் தென் ஆப்பிரிக்காவுக்காக அதிக விக்கெட் வீழ்த்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

  Next Story
  ×