என் மலர்
கிரிக்கெட்

கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் அவுட் ஆனதை கொண்டாடும் டெல்லி வீராங்கனைகள்
மகளிர் பிரீமியர் லீக்: டெல்லி அணிக்கு 110 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மும்பை இந்தியன்ஸ்
- மும்பை இந்தியன்ஸ் அணியில் அதிரடியாக ஆடிய பூஜா வஸ்த்ராகர் 26 ரன்கள் சேர்த்தார்.
- டெல்லி அணி தரப்பில் மாரிசான் கேப், ஷிகா பாண்டே, ஜெஸ் ஜோனாசன் தலா 2 விக்கெட் எடுத்தனர்.
மும்பை:
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை டிஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில் நடைபெறும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற டெல்லி அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.
டெல்லி அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறிய மும்பை இந்தியன்ஸ், டாப் ஆர்டர் வீராங்கனைகளை விரைவில் இழந்தது. கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (23 ரன்கள்) தவிர மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். அதிரடியாக ஆடிய பூஜா வஸ்த்ராகர் 26 ரன்கள் சேர்த்து ஆறுதல் அளித்தார். இஸ்சி வாங்கி 23 ரன், அம்ஜோத் கவுர் 19 ரன் எடுக்க, மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 109 ரன்கள் எடுத்தது.
டெல்லி அணி தரப்பில் மாரிசான் கேப், ஷிகா பாண்டே, ஜெஸ் ஜோனாசன் தலா 2 விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 110 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது.