search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    மகளிர் டி20 உலகக் கோப்பையை வெல்லுமா தென் ஆப்பிரிக்கா? 157 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஆஸி.

    • பெர்த் மூனே 53 பந்துகளில் 9 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
    • தென் ஆப்பிரிக்கா தரப்பில் மரிசான் கேப், ஷப்னிம் இஸ்மாயில் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

    கேப் டவுன்:

    மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று தென்ஆப்பிரிக்காவின் கேப் டவுன் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் மெக் லேனிங் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

    துவக்க வீராங்கனைகளாக அலிசா ஹீலி, பெர்த் மூனே களமிறங்கினர். ஹீலி 18 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், பெர்த் மூனே- கார்ட்னர் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நம்பிக்கை அளித்தது. அதிரடி காட்டிய கார்ட்னர் 2 பவுண்டரி, 2 சிக்சருடன் 29 ரன்னில் விக்கெட்டை இழந்தார். மறுமுனையில் மூனே அரை சதம் கடந்து தனது அதிரடியை தொடர்ந்தார்.

    கிரேஸ் ஹாரிஸ், கேப்டன் மெக் லேனிங் தலா 10 ரன்களில் ஆட்டமிழந்தனர். எலிஸ் பெர்ரி 7 ரன்னிலும், ஜார்ஜியா ரன் எதுவும் எடுக்காமலும் விக்கெட்டை இழந்தனர்.

    இதனால் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர் முடிவில் விக்கெட் 6 இழப்பிற்கு 156 ரன்கள் சேர்த்தது. பெர்த் மூனே 53 பந்துகளில் 9 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    தென் ஆப்பிரிக்கா தரப்பில் மரிசான் கேப், ஷப்னிம் இஸ்மாயில் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். இதையடுத்து 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்குகிறது.

    இன்றைய ஆட்டத்தைப் பொருத்தவரை தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சில் சிறப்பாக இருந்தது. ஆனால் பெர்த் மூனேவின் ரன் குவிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை.

    Next Story
    ×