என் மலர்

  உடற்பயிற்சி

  கூந்தல் உதிர்வை தடுக்கும் 2 முத்திரைகள்
  X

  கூந்தல் உதிர்வை தடுக்கும் 2 முத்திரைகள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • முழுமையான தீர்வு காண சற்று காலம் பிடிக்கும்.
  • தினமும் பயிற்சி செய்து வந்தால் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

  இன்று ஆண்களுக்கு மட்டுமல்ல…. பெண்களுக்கும் முடி உதிர்வு அதிகமாகி, வழுக்கை விழுவது அதிகமாகி வருகிறது. உடல் சூடு ஒரு காரணம், பிட்யூட்டரி, பினியல் சுரப்பிகள் சரியாக இயங்காதது ஒரு காரணம். பரம்பரை, பரம்பரையாக இது ஒரு வியாதியாக சிலருக்கு இருக்கும்.

  இதற்கு நாம் சில குறிப்பிட்ட முத்திரைகள், யோகப்பயிற்சிகள் எடுத்து சரி செய்ய முடியும். முழுமையான தீர்வு காண சற்று காலம் பிடிக்கும். ஆனால் தொடர்ந்து பயின்றால் கட்டுக்குள் கொண்டு வரலாம். முடி உதிர்வு பிரச்சனைக்கு நம் விரல்களிலேயே யோகமுத்திரை வடிவத்தில் ஒரு எளிமையான தீர்வு இருக்கிறது. ஒருவருக்கு முடி கொட்டும் பிரச்சனை இருந்தால் அதை சரி செய்ய, இரண்டு விதமான முத்திரைகள் உள்ளன. அவற்றை தினமும் பயிற்சி செய்து வந்தால் நல்ல மாற்றத்தைக் காணலாம்!

  பிரசன்ன முத்திரை: விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் கவனிக்கவும். பின் கட்டை விரல் தவிர மற்ற விரல்களை மடக்கி இரண்டு கை விரல்களின் நகங்கள் ஒன்றையொன்று தொடும்படி படத்தில் உள்ளது போல் வைக்கவும். கட்டை விரல் இரண்டும் படத்தில் உள்ளதுபோல் சேர்ந்திருக்கட்டும். சாதாரண மூச்சில் இரண்டு நிமிடம் முதல் ஐந்து நிமிடங்கள் இருக்கவும். காலை மதியம் மாலை மூன்று வேளையும் செய்யவும். அவசர படாமல் நிதானமாக ஐந்து நிமிடங்கள் செய்யவும்.

  நேரம் கிடைக்கும் பொழுது இந்த முத்திரையை கை விரல் நகங்களை ஒன்றையொன்று உராயும் படி லேசாக பத்து முறைகள் தேய்க்கவும். ஒரு நாளில் மூன்று முறைகள் செய்யவும்.

  லிங்க முத்திரை: எல்லா கை விரல்களையும் கோர்த்து இடது கை கட்டை விரலை மட்டும் நேராக வைக்கவும். இதயம் பக்கத்தில் கையை வைத்து சாதாரண மூச்சில் இரண்டு நிமிடங்கள் இருக்கவும். காலை, மதியம் மாலை மூன்று வேளைகள் செய்யவும்.

  வாரம் ஒரு முறை எண்ணெய் தேய்த்து குளிக்கவும். நெல்லிப்பழம் சாப்பிடவும். அதி மதுர பொடி உணவில் எடுத்துக் கொள்ளவும். மஞ்சள் கரிசலாங்கண்ணி கீரை உணவில் எடுக்கவும். மணத்தக்காளி கீரை உணவில் எடுக்கவும். கடுக்காய் சூர்ணம் ஒரு வேளை எடுக்கவும். முளைகட்டிய வெந்தய சாதப்பொடி உணவில் எடுக்கவும்.

  எப்பொழுதும் அதிக அளவு சிந்தனை செய்ய வேண்டாம். மன அழுத்தம் இல்லாமல் வாழ கற்றுக்கொள்ளுங்கள். நேரம் கிடைக்கும் பொழுது இரு நாசி வழியாக மூச்சை மெதுவாக இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும். ஐந்து முறைகள் செய்யவும். ஒரு நாளில் பத்து முறைகள் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை இது போன்று செய்யவும்.

  Next Story
  ×