search icon
என் மலர்tooltip icon

    கதம்பம்

    நீ என்ன கொம்பனா?
    X

    நீ என்ன கொம்பனா?

    • விவசாயம் செய்வதற்கு எருதுகளின் தேவை இருந்திருக்கிறது.
    • காலப்போக்கில் எருதுகளை அடக்குபவனே தலைவன் என்கிற எண்ணப்பாடு ஏற்பட்டிருக்கலாம்.

    "நீ என்ன பெரிய கொம்பனா டே...?

    "உனக்கு மட்டும் என்னவே ரெண்டு கொம்பா மொளச்சி இருக்கு"

    என்று பெரியதனம் செய்யும் மனிதர்களை பார்த்து நாம் சொல்வதுண்டு. கேட்டுகேட்டு பழகிப்போன தமிழகத்து சொல்லாடல்கள் இவை.

    உற்றுப் பார்த்தால் அதன் அர்த்தம் "வலியவன், யாராலும் வெல்ல முடியாதவன்" என்றே வருகின்றது. அதாவது கொம்பினை வைத்து இருக்கின்றவன் பலசாலி, தலைவன் என்ற மறைபொருள் அவை தருகின்றன.

    இன்றும் கூட பழங்குடி மக்களுள் தலைவராக இருக்கிறவர்கள் அவர்களது தலைமைக்கு அடையாளமாக எருமைக் கொம்பைத் தலையில் அணிந்து தோன்றுகின்றனர்.

    விவசாயம் செய்வதற்கு எருதுகளின் தேவை இருந்திருக்கிறது. அவற்றை அடக்குபவனும் தேவைப்பட்டிருக்கிறான். அவனே கூட்டத்தால் கொண்டாடப்பட்டிருக்கிறான். காலப்போக்கில் எருதுகளை அடக்குபவனே தலைவன் என்கிற எண்ணப்பாடு ஏற்பட்டிருக்கலாம். அவனை வழிபாடும் நிலைமையும் உருவாகி இருக்கும்.

    இங்கே தமிழகத்தின் காளையை அடக்கும் ஜல்லிக்கட்டுகள் நம் கண்முன்னே வந்து மறையக்கூடும். ஆக ,கொம்புகள் ஆற்றல் மற்றும் அரசாட்சியின் குறியீடு.

    -சமரன் நாகன்

    Next Story
    ×