search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சத்தீஸ்கர் குண்டுவெடிப்பில் 10 காவலர்கள் கொல்லப்பட்ட வழக்கு- 4 மாவோயிஸ்டுகள் கைது
    X

    சத்தீஸ்கர் குண்டுவெடிப்பில் 10 காவலர்கள் கொல்லப்பட்ட வழக்கு- 4 மாவோயிஸ்டுகள் கைது

    • நான்கு மாவோயிஸ்டுகளையும் சிறையில் அடைத்த நீதிமன்றம், சிறார்களை சிறார் இல்லத்திற்கு அனுப்பியது.
    • குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணை நடந்து வருகிறது.

    சத்தீஸ்கரின் தண்டேவாடா மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 26ம் தேதி அன்று நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 10 மாவட்ட ரிசர்வ் காவலர் (டிஆர்ஜி) ஜவான்கள் மற்றும் ஒரு ஓட்டுநர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 மாவோயிஸ்டுகள் கைது செய்யப்பட்டனர். மேலும், மூன்று சிறுவர்கள் சிறார் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.

    தடை செய்யப்பட்ட சிபிஐ (மாவோயிஸ்ட்) யின் தர்பா பிரிவின் கீழ் உள்ள மலங்கேர் பகுதி கமிட்டியை சேர்ந்த புத்ரா மத்வி, ஜிதேந்திர முச்சாகி, ஹித்மா மட்கம் மற்றும் ஹித்மா மத்வி என நான்கு மாவோயிஸ்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

    இவர்களில் புத்ரா மத்வி, முச்சக்கி மற்றும் ஹித்மா மட்கம் ஆகியோர் வெள்ளிக்கிழமையும், ஹித்மா மத்வி நேற்றும் கைது செய்யப்பட்டனர்.

    15 முதல் 17 வயதுக்குட்பட்ட மூன்று இளம்வயது சிறுவர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டு சிறையில் அடைக்காமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். நான்கு மாவோயிஸ்டுகளையும் சிறையில் அடைத்த நீதிமன்றம், சிறார்களை சிறார் இல்லத்திற்கு அனுப்பியது.

    இந்த சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணை நடந்து வருகிறது.

    Next Story
    ×