என் மலர்

  இந்தியா

  அனைவரும் இணைவோம்...அனைவரும் உயர்வோம்-  பிரதமர் மோடி உரைகள் அடங்கிய புத்தகம் இன்று வெளியீடு
  X

  பிரதமர் மோடி உரைகள் அடங்கிய புத்தகம்

  அனைவரும் இணைவோம்...அனைவரும் உயர்வோம்- பிரதமர் மோடி உரைகள் அடங்கிய புத்தகம் இன்று வெளியீடு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஒரு வருடம் பிரதமர் மோடி ஆற்றிய உரைகள் 10 தலைப்புகளில் இடம் பெற்றுள்ளன.
  • புத்தக வெளியீட்டு விழாவிற்கு மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் ஏற்பாடு.

  கடந்த 2019ம் ஆண்டு மே மாதத்தில் இருந்து 2020 ஆம் ஆண்டு மே மாதம் வரை ஒரு வருடம் பிரதமர் மோடி ஆற்றிய உரைகள் அடங்கிய புத்தகம் டெல்லியில் இன்று வெளியிடப்படுகிறது. இந்த புத்தகத்தில் பிரதமரின் தேர்வு செய்யப்பட்ட 86 உரைகள் 10 தலைப்புகளில் இடம் பெற்றுள்ளன.

  அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரின் நம்பிக்கை என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த புத்தக வெளியீட்டு விழாவிற்கு தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.

  தலைமை விருந்தினராக கேரள மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கானும், கவுரவ விருந்தினராக முன்னாள் குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடுவும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.

  மத்திய தகவல், ஒலிபரப்புத்துறை மந்திரி அனுராக் சிங் தாக்கூர் தலைமையில் நடைபெறும் நிகழ்ச்சியில் இந்தி, ஆங்கிலம் மொழிகளில் பிரதமர் மோடி உரைகள் அடங்கிய புத்தகம் வெளியிடப்படுகிறது.

  Next Story
  ×