search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மாநிலங்களுக்கு வட்டியில்லா கடன் வழங்க ரூ. 1.3 லட்சம் கோடி: பட்ஜெட்டில் அறிவிப்பு
    X

    மாநிலங்களுக்கு வட்டியில்லா கடன் வழங்க ரூ. 1.3 லட்சம் கோடி: பட்ஜெட்டில் அறிவிப்பு

    • இந்தியாவின் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது.
    • விலைவாசி உயர்வு கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது.

    மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய இடைக்கால பட்ஜெட்டை இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

    அதில் இடம் பிடித்துள்ள முக்கியம்சங்கள்:

    * 2025 நிதியாண்டியில் உள்கட்டமைப்புகளுக்கான நிதி 11.11 லட்சம் கோடியாக அதிகரிப்பு

    * மக்கள் தொகை பெருக்கத்தின் சவால்களை எதிர்கொள்ள உயர்மட்டக் குழு அமைக்கப்படும்

    * நிதி பற்றக்காகுறை எதிர்வரும் ஆண்டில் மொத்த ஜிடிபி-யில் 5.1 சதவீதமாக இருக்கும் என மதிப்பீடு

    * நடப்பாண்டில் மாநிலங்களுக்கு வட்டியில்லா கடன், பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்ள 1.3 லட்சம் கோடி வழங்கப்படும்

    * நாட்டு மக்களின் சராசரி வருமானம் அதிகரிப்பு

    * கடந்த சில வருடங்களில் நேரடி வரி வருவாய் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.

    * ஏற்கனவே 7 லட்சம் வரை வருமான வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

    * வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    * மாதாந்திர ஜிஎஸ்டி வருவாய் சராசரி ரூ. 1.66 லட்சம் கோடியை தாண்டியுள்ளது.

    * பத்து ஆண்டுகளில் 30கோடி பெண்களுக்கு தொழிற்கடன் வழங்கப்பட்டுள்ளது;

    * கடந்த 10 ஆண்டுகளில் கல்வி கற்கும் பெண்களின் எண்ணிக்கை 28% அதிகரித்துள்ளது;

    * 11.8 கோடி விவசாயிகளுக்கு வங்கிக் கணக்குகளில் நேரடியாக மானியம் செலுத்தப்பட்டுள்ளது;

    * 78 லட்சம் சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.2.3லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது;

    * திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 1.4 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது- நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

    * மக்களின் சராசரி வருவாய் 50% உயர்ந்துள்ளது;

    * 2027 ல் இந்தியா வளர்ந்த நாடு என்கிற கனவினை எட்டும்;

    * 4 கோடி பேருக்கு இலவச வீடுகள் வழங்கப்பட்டுள்ளன;

    * அடுத்த 5 ஆண்டுகளில் 2 கோடி பேருக்கு இலவச வீடுகள் வழங்கப்படும்

    * ஒரே நாடு, ஒரே சந்தை , ஒரே வரி போன்றவை சரக்கு மற்றும் சேவை வரிக்கு உதவியாக உள்ளது;

    * முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் 43 கோடி இளைஞர்களுக்கு புதிய தொழில் தொடங்க கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது;

    * கடந்த 10 ஆண்டுகளில் 7 ஐஐடி , 7 ஐஐஎம் மற்றும் 15 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளது

    * நரேந்திர மோடி பிரதமரான பிறகு விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது;

    * வளர்ச்சிப் பாதையில் நாடு வெற்றி நடை போடுவதால் மீண்டும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சிக்கே மக்கள் வாக்களிப்பார்கள்;

    * நாட்டில் விவசாயிகள், ஏழைகள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் ஆகிய 4 பிரிவினருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது;

    * ரேஷன் கடைகள் மூலம் 80கோடி மக்களுக்கு உணவு தானியம் இலவசமாக வழங்கப்படுள்ளது;

    * கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி பேர் வறுமைக் கோட்டிற்கு கீழிருந்து மீட்கப்பட்டுள்ளனர்-

    * வருமானவரி தாக்கல் செய்வது எளிதாக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×