search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கேரளாவில் மாதிரி வாக்குப்பதிவு- ஒரு முறை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஓட்டு விழுவதாக புகார்
    X

    கேரளாவில் மாதிரி வாக்குப்பதிவு- ஒரு முறை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஓட்டு விழுவதாக புகார்

    • கேரளம் உள்ளிட்ட 21 மாநிலங்களுக்கு உள்பட்ட 102 தொகுதிகளில் தேர்தல்.
    • உடனடியாக அதை மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் நாளை (19-ம் தேதி) தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

    இதன்படி நாடு முழுவதும் முதல் கட்டமாக நாளை முதல் கட்ட தேர்தல் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம் உள்ளிட்ட 21 மாநிலங்களுக்கு உள்பட்ட 102 தொகுதிகளில் நடைபெறுகிறது

    இந்நிலையில், கேரள மாநிலம் காசர்கோடு சட்டமன்ற தொகுதியில் இன்று மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில், ஒரு முறை பொத்தானை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஓட்டுகள் விழுவதாக எதிர்கட்சிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

    4 இயந்திரங்களில் இந்த கோளறு கண்டறியப்பட்டுள்ளதாகவும், மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள காங்கிரஸின் கைச்சின்னம் மற்றதைவிட சிறியதாக இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    உடனடியாக அதை மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×