என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
பீகாரில் பிரதமர் மோடியின் முதல் பிரசாரமே... தேஜஸ்வி யாதவ் பதிலடி
- பீகாரில் பா.ஜனதா, நிதிஷ் குமார் கட்சி, சிராக் பஸ்வான் கட்சி இணைந்து போட்டியிடுகின்றன.
- காங்கிரஸ், லாலு கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணி சார்பில் களம் இறங்கியுள்ளன.
பீகார் மாநில முன்னாள் துணை முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவருமான தேஜஸ்வி யாதவ் பாட்டினாவில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது தேஜஸ்வி யாதவ் கூறியதாவது:-
பிரதமர் மோடி தனது தேர்தல் பிரசாரங்களில் எப்போதுமே வாரிசு அரசியல் குறித்து பேசுவார். ஆனால், பீகாரில் அவரது முதல் தேர்தல் பிரசாரம், அவரது பேரணி வாரிசு அரசியல்வாதிக்காகவே அமைந்தது. இது மோடி சொல்வது என்ன? அதை எப்படி செயல்படுத்துகிறார் என்ற வேறுபாட்டை காட்டுகிறது" என்றார்.
பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தின்போது திமுக, காங்கிரஸ் மற்றும் லாலு கட்சி ஆகியவற்றை குடும்ப அரசியல் என கடுமையாக விமர்சனம் செய்வது குறிப்பிடத்தக்கது.
பீகாரில் பா.ஜனதா, நிதிஷ் குமார் கட்சி, சிராக் பஸ்வான் கட்சி இணைந்து போட்டியிடுகின்றன. காங்கிரஸ், லாலு கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணி சார்பில் களம் இறங்கியுள்ளன.
கடந்த தேர்தலில் பா.ஜனதா கூட்டணி 40 இடங்களில் 39-ல் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.