search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தங்கத்தட்டில் பரிமாறப்படும் புதிய வகை பானிபூரி
    X

    தங்கத்தட்டில் பரிமாறப்படும் புதிய வகை பானிபூரி

    • வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் உணவு தயாரிப்பை விமர்சித்து பதிவிட்டனர்.
    • இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த வீடியோ இணையத்தில் வைரலாகி 80 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை குவித்தது.

    இந்தியாவில் தெருவோர உணவுகளில் அதிகமாக விற்பனையாகும் பானிபூரி பல்வேறு வகைகளில் தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது.

    இந்நிலையில், குஜராத்தின் அகமதாபாத்தை சேர்ந்த ஒரு தெரு உணவக விற்பனையாளர் ஒருவர், பானிபூரியின் புதிய வகை ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளார். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. அதில், தங்கத் தட்டில் தங்கம் மற்றும் வெள்ளிப்படலத்துடன் பரிமாறப்படும் பானிபூரியுடன் துருவிய பாதாம் மற்றும் தண்டாய் ஆகிய கலவை சேர்க்கப்பட்டுள்ளது. மொத்தம் 6 பானிபூரிகள் தட்டில் உள்ளது.

    ஒவ்வொரு பானிபூரியிலும் துண்டாக்கப்பட்ட பாதாம் மற்றும் சில முழு முந்திரி மற்றும் பிஸ்தாவை சேர்க்கும் விற்பனையாளர் தாராளமாக தேனை சேர்த்து அவற்றை வாடிக்கையாளர்களுக்கு பரிமாறுவது போல காட்சிகள் உள்ளன. உணவு தயாரிப்பு குறித்த வீடியோக்களை பகிறும் குஷ்பு பர்மர் மற்றும் மனன் ஆகியோர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி 80 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை குவித்தது.

    இதைப்பார்த்த பயனர்கள் பலரும் இந்த உணவு தயாரிப்பை விமர்சித்து பதிவிட்டனர். ஒரு பயனர், இது பானிபூரியாக இருக்க வேண்டும். ஆனால் டிரை புரூட் பூரியை தான் உருவாக்கி உள்ளனர் என கூறியிருந்தார். இதேபோல, பயனர்கள் பலரும் பாரம்பரிய பானிபூரியின் உண்மையான சுவையை மாற்ற முடியாது என்று பதிவிட்டுள்ளனர். அதேநேரம் சில பயனர்கள் இந்த புதிய உணவை ருசிக்க விரும்புவதாக பதிவிட்டுள்ளனர்.



    Next Story
    ×