search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    சிரியாவின் கடற்கரை பிராந்தியத்தில் இஸ்ரேல் வான் தாக்குதல்: இரண்டு வீரர்கள் பலி
    X

    சிரியாவின் கடற்கரை பிராந்தியத்தில் இஸ்ரேல் வான் தாக்குதல்: இரண்டு வீரர்கள் பலி

    • சிரியா மீது இஸ்ரேல் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது
    • கடந்த மாதம் 28-ந்தேதி சர்வதேச விமான நிலையம் மீது தாக்குதல் நடத்தியது

    இஸ்ரேல் வான் தாக்குதல் நடத்தியதில் இரண்டு வீரர்கள் உயிரிழந்ததுடன், ஆறு பேர் காயம் அடைந்ததாக சிரியா குற்றம்சாட்டியுள்ளது.

    கடற்கரை பிராந்தியமான லடாகியாவில், மத்திய தரைக்கடலில் பறந்து கொண்டிருந்த விமானங்கள், குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. இதில் வான் பாதுகாப்பு அமைப்புகள் தாக்கப்பட்டதாக ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் இரு வீரர்கள் உயிரிழந்துள்ளனர். 6 பேர் காயம் அடைந்தனர் என்றார்.

    அதன்பின் ஹமா பிராந்தியத்திலும் தாக்குதல் நடத்தப்பட்டதாக உள்ளூர் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இங்கிலாந்தின் சிரியாவுக்கான மனித உரிமை கண்காணிப்பகம், எதிர்க்கட்சிகளுடன் தொடர்புடைய போர் கண்காணிப்பாளர் ஆகியவை 2-வது வான் தாக்குதல், அறிவியல் ஆராய்ச்சி மையத்தை குறிவைத்து நடத்தப்பட்டது என்று தெரிவித்துள்ளது. சேதம் குறித்த உடனடித் தகவல் ஏதும் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

    கடந்த ஆகஸ்ட் மாதம் 28-ந்தேதி வடக்கு சிரியாவின் அலெப்போவில் உள்ள சர்வதேச விமான நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில், விமான ஓடுதளம் சேதம் அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    சிரியா அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளில் கடநத் சில வருடமாக இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதல் சிரியா நாட்டின் படைகள் அல்லது ஈரான் தொடர்புடைய குழுக்கள் மீது நடத்தப்படுகிறது. சிரியாவில் ஈரானின் ஆதிக்கத்தை தடுத்து நிறுவத்துவதாக இஸ்ரேல் கூறி வருகிறது.

    Next Story
    ×