search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    அடுத்த மேட்ச் எப்படியாவது ஜெயிக்கணும் - சோம்நாத் கோவிலில் ஹர்திக் பாண்ட்யா வழிபாடு
    X

    'அடுத்த மேட்ச் எப்படியாவது ஜெயிக்கணும்' - சோம்நாத் கோவிலில் ஹர்திக் பாண்ட்யா வழிபாடு

    • இந்த ஐ.பி.எல். தொடரில் மும்பை அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா நீக்கப்பட்டு, ஹர்திக் பாண்ட்யா புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டார்
    • கடந்த 1 ஆம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மோசமான தோல்வியை தழுவியது

    ஐ.பி.எல். 2024 டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மும்பை அணிக்கு ஐ.பி.எல். தொடரில் பல கோப்பைகளை வென்று கொடுத்த ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஹர்திக் பாண்ட்யா மும்பை அணியின் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.

    நடப்பு ஐ.பி.எல். தொடரில் புதிய கேப்டனுடன் விளையாடி வரும் மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை விளையாடிய போட்டிகளில் தோல்வியை தழுவி தடுமாறி வருகிறது.

    அதிலும், கடந்த 1 ஆம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மோசமான தோல்வியை தழுவியது. இந்தப் போட்டியைத் தொடர்ந்து வரும் 7 ஆம் தேதி மும்பையில் டெல்லி அணியை எதிர்கொள்கிறது.

    இந்நிலையில் தான் ஹர்திக் பாண்டியா குஜராத் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற சோம்நாத் கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு மேற்கொண்டுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    அந்த வீடியோவில் ஹர்திக் பாண்டியா சிவனுக்கு தந்து கையால் அபிஷேகம் செய்தும் தீபாராதனை காட்டும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

    மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாக நியமிக்கப்பட்டதிலிருந்து ஒவ்வொரு போட்டியின் போதும் ஹர்திக் மற்றும் ரோகித் இடையே கருத்து வேறுபாடு இருக்குமோ என்ற வகையில் பல்வேறு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×