search icon
என் மலர்tooltip icon

    நாமக்கல்

    • புரட்டாசி மாதத்தில் தொடர்ந்து 3 நாட்கள் விழும்.
    • சூரிய ஒளிக்கதிர் விழும் அதிசய நிகழ்வு

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள கல்லாங்குளம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் உள்ள மூலவர் மீது புரட்டாசி மாதத்தில் தொடர்ந்து 3 நாட்கள் மூலவர் அண்ணாமலையார் மீது சூரிய ஒளிக்கதிர் விழும் அதிசய நிகழ்வு நடைபெறும்.

    அதேபோல் இன்று காலை 6.30 மணி அளவில் சூரிய ஒளிக்கதிர் விழுந்தது குறிப்பிடத்தக்கது.

    • தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக தினசரி லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.
    • தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, முட்டை விலையை அறிவித்து வருகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

    தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதிக்கும் போக, மீதமுள்ள முட்டைகள், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக தினசரி லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.

    தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, முட்டை விலையை அறிவித்து வருகிறது. அதை பண்ணையாளர்கள் கடைபிடித்து வருகின்றனர். அதன்படி நேற்று என்இசிசி மண்டல தலைவர் சிங்கரஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், முட்டை விலை மேலும் 5 பைசா உயர்த்தப்பட்டு ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 5.05 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    • உயிருக்கு ஆபத்தான நிலையில் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
    • சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே சக்திநாயக்கன் பாளையம் பால் சொசைட்டி பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவரது மகன் செந்தில்குமார் தனது வீட்டில் விளையாடி கொண்டிருந்த பக்கத்து வீட்டை சேர்ந்த பாபு என்பவரது 10 வயது கஷ்மிதா என்ற பெண் குழந்தையை கத்தியால் வெட்டியுள்ளார்.

    குழந்தையின் சத்தம் கேட்டு செந்தில் குமாரின் தாய் சம்பூர்ணம் ஓடி வந்து சத்தம் போடவே அக்கம் பக்கத்தில் இருந்த தங்கராசு, முத்துவேலு ஆகியோர் செந்தில் குமாரை பிடிக்க ஓடி வந்தனர். அவர்கள் இருவரையும் செந்தில் குமார் கத்தியால் தாக்கினார்

    இதில் சிறுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் விவேகானந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

    படுகாயம் அடைந்த தங்கராசு, முத்துவேல் இருவரும் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    போலீசார் சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் செந்தில் குமார் பல ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் உடல் நிலை தேரிவந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் பைக் சம்பந்தமாக குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மீண்டும் மனநலம் பாதிக்கப்பட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டில் அறையிலேயே யாருடனும் பேசாமல் இருந்து வந்துள்ளார்.

    இந்நிலையில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 4 பெண் குழந்தைகளில் ஷோபாவில் அமர்ந்திருந்த கஷ்மிதாவை லேப்டாப் வைத்திருந்த மேஜைக்கு அடியில் இருந்த கத்தியை எடுத்து கழுத்தி வெட்டியுள்ளார் என்று விசாரணையில் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கரையோர மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை.
    • தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தல்.

    கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக கிருஷ்ண ராஜசாகர், கபினி ஆகிய 2 அணைகளும் தனது முழு கொள்ளளவை எட்டியது.

    கிருஷ்ண ராஜசாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து வினாடிக்கு 57 ஆயிரத்து 706 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    இந்த தண்ணீர் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வந்து கொண்டு இருக்கிறது.

    இதனால், மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியதால் நாமக்கல் பள்ளிப்பாளையம் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    எந்த நேரத்திலும் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படலாம் என்பதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் காவிரி கரையோரம் வசிக்கும் பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவிறுத்தப்பட்டுள்ளது.

    இதனால், கரையோர மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • சிறையில் அடைக்கப்பட்ட டாக்டர் அனுராதா கடந்த சில மாதங்களுக்கு முன் ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்தார்.
    • கிளினிக் உள்ளிட்ட பகுதியில் சீல் வைக்கப்பட்ட அறைகளை சீலை அகற்றி அங்கிருந்த ஆவணங்களை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் மகப்பேறு அரசு டாக்டராக பணியாற்றி வந்தவர் அனுராதா.

    இந்த நிலையில் குழந்தை விற்பனையில் ஈடுபட்டதாக அனுராதா மற்றும் புரோக்கர்கள் உள்பட 3 பேர் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15-ந் தேதி கைது செய்யப்பட்டனர்.

    இதையடுத்து நாலு கால் மண்டபம் அருகே இருந்த தமிழரசு மருத்துவமனையில் டாக்டர் அனுராதா பயன்படுத்தி வந்த அறைகள் மற்றும் நாமக்கல் ரோட்டில் உள்ள அவருக்கு சொந்தமான மருத்துவமனை மற்றும் கிளினீக் ஆகியவை அரசு அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டது.

    குழந்தை விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட டாக்டர் அனுராதா கடந்த சில மாதங்களுக்கு முன் ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்தார்.

    இந்தநிலையில் திருவாரூர் மாவட்ட துணை இயக்குனர் திலகம் தலைமையில் நிர்வாக அலுவலர் செந்தில்குமார் உள்ளிட்ட மருத்துவத் துறை அதிகாரிகள் அனுராதா பணியாற்றி வந்த திருச்செங்கோடு அரசு மருத்துவமனை மற்றும் அனுராதாவுக்கு சொந்தமான நாமக்கல் ரோட்டில் உள்ள கிளினிக் உள்ளிட்ட பகுதியில் சீல் வைக்கப்பட்ட அறைகளை சீலை அகற்றி அங்கிருந்த ஆவணங்களை கைப்பற்றி ஆய்வு செய்தனர். சோதனை நிறைவடைந்த பிறகு மீண்டும் சீல் வைக்கப்பட்டது.

    இதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் என்ன? குழந்தை விற்பனையில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? மேலும் குழந்தைகள் விற்கப்பட்டுள்ளதா? என்பது குறித்த கேள்விகளுக்கு அதிகாரிகள் தகவல் தெரிவிக்க மறுத்து விட்டனர்.

    தற்போது குழந்தை விற்பனை விவகார வழக்கை மீண்டும் அதிகாரிகள் கையில் எடுத்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • யுவராஜூக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக்கோரி அவரது தாயார் ரத்தினம் நாமக்கல் கலெக்டரிடம் மனு அளித்துள்ளார்.
    • கோகுல் ராஜ் கொலை வழக்கில் காவல்துறையினர் நியாயமான முறையில் விசாரணை நடத்தவில்லை.

    நாமக்கல்:

    சேலம் ஓமலூரை சேர்ந்த கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்ட வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

    இந்நிலையில் கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜூக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக்கோரி அவரது தாயார் ரத்தினம் நாமக்கல் கலெக்டரிடம் மனு அளித்துள்ளார். அவர் அளித்துள்ள மனுவில்,

    கோகுல் ராஜ் கொலை வழக்கில் காவல்துறையினர் நியாயமான முறையில் விசாரணை நடத்தவில்லை.

    யுவராஜூக்கு எதிராக வேண்டுமென்றே வழக்கு புனையப்பட்டதாக குற்றம்சாட்டி அவரது தாயார் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் மனு அளித்துள்ளனர்.

    • ஆம்னி வேன் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த கார் மீது நேருக்குநேர் மோதியது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை அருகே பெரிய மருதூர் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (வயது45). விவசாயி. இவரது மகன் மகன் லோகேஷ் (17). அதே பகுதியை சேர்ந்த ராமசாமியின் நெருங்கிய உறவினர் ரமேஷ் (42). இவரமு மகன் சுதர்சன் (14).

    நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் சுதர்சன், லோகேஷ் ஆகிய இருவரும் ஆம்னி வேனை ஓட்டி பழகுவதற்காக வீட்டில் இருந்து எடுத்தனர். ஆம்னி வேனை சிறுவன் சுதர்சன் ஓட்டினார். இருவரும் பரமத்தி சென்றுவிட்டு மீண்டும் கபிலர்மலை நோக்கி வந்துகொண்டு இருந்தனர். கபிலர்மலை பாகம்பாளையம் பிரிவு ரோடு தனியார் பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது ஆம்னி வேன் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த கார் மீது நேருக்குநேர் மோதியது. இதில் லோகேஷ், சுதர்சன் ஆகியோர் உடல் நசுங்கி பலியாகினர். காரை ஓட்டி வந்த கபிலர்மலை அருகே கருக்கம்பாளையம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் (26) என்பவரும் பலத்த காயம் அடைந்தார்.

    இந்த சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இது குறித்த தகவல் அறிந்த நாமக்கல் வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன் மற்றும் பரமத்தி போக்குவரத்து ஆய்வாளர் சரவணன் ஆகியோர் விபத்து நடந்த பகுதிக்கு விரைந்து வந்து ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது சுதர்சன் ஓட்டுநர் உரிமம் இன்றி காரை ஓட்டி விபத்து நிகழ்ந்தது தெரியவந்தது.

    இது குறித்து மோட்டார் போக்குவரத்து அலுவலர் கூறுகையில், 18 வயதுக்கு குறைவான சிறுவர்கள் இருசக்கர வாகனங்கள், கார்கள் ஓட்டுவதற்கு அனுமதி இல்லை. இதனால் காரை ஓட்டி சென்று விபத்து நிகழ்ந்ததற்காக சுதர்சனின் தந்தை ரமேஷ் என்பவருக்கு ரூ.25,000 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட உள்ளது. அபராத தொகையை கட்ட தவறினால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என தெரிவித்தார்.

    • அ.தி.மு.க. போட்டியிட்ட 32 இடங்களிலும் படுதோல்வி அடைந்துள்ளது.
    • அ.தி.மு.க. அழிவதை இனியும் வேடிக்கை பார்க்க முடியாது.

    தமிழ்நாட்டை பொறுத்தவரை தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா மற்றும் நாம் தமிழர் கட்சி என 4 முனைப்போட்டியில் தேர்தலை சந்தித்தனர். இதில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இதில், அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் அ.தி.மு.க. 32 இடங்களில் தனித்து போட்டியிட்டது. தே.மு.தி.க.வுக்கு 5 இடங்களும், புதிய தமிழகம் 1, எஸ்.டி.பி.ஐ. 1 என 7 இடங்களில் கூட்டணி கட்சிகளும் போட்டியிட்டன.

    இதில் அ.தி.மு.க. போட்டியிட்ட 32 இடங்களிலும் படுதோல்வி அடைந்துள்ளது. குறிப்பாக நெல்லை, கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரி ஆகிய 3 தொகுதிகளில் 4-வது இடத்திற்கு தள்ளப்பட்டது. அ.தி.மு.க. கூட்டணியில் தென் சென்னை, கன்னியாகுமரி, புதுச்சேரி, தேனி, தூத்துக்குடி, நெல்லை மற்றும் வேலூர் ஆகிய 7 தொகுதிகளில் அ.தி.மு.க. டெபாசிட் இழந்துள்ளது. விளவங்கோடு சட்டசபை இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க. 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

    இதையடுத்து அ.தி.மு.க. அழிவதை இனியும் வேடிக்கை பார்க்க முடியாது. அ.தி.மு.க. ஒன்றுபட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம் என்று அக்கட்சி தொண்டர்களுக்கு சசிகலா அழைப்பு விடுத்து இருந்தார். இவரைத் தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வமும், அ.தி.மு.க. வினர் ஒன்றிணைய அழைப்பு விடுத்திருந்தார்.

    இவரது அழைப்பை நிராகரித்த அ.தி.மு.க. ஓ.பி.எஸ்.-க்கு அழைப்பு விடுக்க தார்மீக உரிமையும், தகுதியும் இல்லை என்று தெரிவித்தது.

    இந்நிலையில் தமிழ்நாட்டில் அதிமுக படுதோல்வி அடைந்தது எதிரொலியாக, கட்சி ஒன்றுபட வேண்டும் என்று கூறி அதிமுக தொண்டர் மொட்டையடித்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

    இதுகுறித்து பேசிய அதிமுக தொண்டர், "அதிமுக கட்சி ஒற்றுமையாக இருந்து செயல்பட வேண்டும் என்று அன்போடு எடப்பாடி பழனிசாமி, தங்கமணி அண்ணன் அவர்களிடம் கேட்டுக்கொள்கிறேன்," என்று தெரிவித்துள்ளார்.

    • தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு முட்டை விலையை அறிவித்து வருகிறது.
    • கடந்த 26-ந்தேதி ரூ. 5.80 ஆக இருந்த முட்டை விலை 20 பைசா குறைக்கப்பட்டு ரூ. 5.60 ஆனது.

    நாமக்கல்:

    நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில், 1,000-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு 6 கோடி முட்டைக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன.

    தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. முட்டைகள் தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும், கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், விற்பனைக்காக தினசரி லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.

    தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு முட்டை விலையை அறிவித்து வருகிறது. அதை பண்ணையாளர்கள் கடைபிடித்து வருகின்றனர். கடந்த 26-ந்தேதி ரூ. 5.80 ஆக இருந்த முட்டை விலை 20 பைசா குறைக்கப்பட்டு ரூ. 5.60 ஆனது. 27-ந் தேதி மீண்டும் 20 பைசா குறைக்கப்பட்டு ரூ. 5.40 ஆனது. 28-ந் தேதி மேலும் 20 பைசா குறைந்து ரூ. 5.20 ஆனது. 29-ந் தேதி முட்டை விலை சரிவில் இருந்து மீண்டு 5 பைசா உயர்ந்து ரூ. 5.25 ஆனது. நேற்று 30-ந்தேதி நாமக்கல் மண்டல தலைவர் சிங்கராஜ் தலைமையில் நடைபெற்ற என்இசிசி கூட்டத்தில் முட்டை விலை மேலும் 5 பைசா உயர்த்தப்பட்டு 1 முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ. 5.30 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

    முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்) சென்னை-600, பர்வாலா-425, பெங்களூரு-570, டெல்லி-450, ஐதராபாத்-495, மும்பை-570, மைசூர்-570, விஜயவாடா-490, ஹொஸ்பேட்-525, கொல்கத்தா-525.

    கோழிவிலை: பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ.140 ஆக பிசிசி அறிவித்துள்ளது. முட்டைக்கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ. 98 ஆக தென்னிந்திய கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் (சிகா) நிர்ணயித்துள்ளது.

    • அறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது முத்துக்குமார் மயங்கிய நிலையில் கிடந்தார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் அருகே உள்ள குரும்பலமகாதேவி,

    வடுகபாளையம் பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 30). கட்டிட மேஸ்திரி.

    நேற்று முன்தினம் முத்துக்குமாரை குரும்பல மகாதேவி ஊராட்சி மன்ற நிர்வாகத்தினர் சாக்கடை சுத்தம் செய்யும் பணிக்காக அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு வந்த முத்துக்குமார் குளியல் அறைக்கு சென்றுள்ளார். வெகு நேரமாகியும் முத்துக்குமார் வெளியே வராததால் சந்தேகமடைந்த அவரது மனைவி கிருபா(26) குளியலறைக்கு சென்று கணவரை அழைத்துள்ளார். கதவை திறக்காததால் சந்தேகமடைந்த கிருபா ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தார்.

    அப்போது அவரது கணவர் சுவர் ஒரத்தில் குப்புற விழுந்து கிடந்ததை பார்த்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை அழைத்து குளியல் அறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது முத்துக்குமார் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை காப்பாற்றி ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே முத்துக்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துக்குமார் எப்படி இறந்தார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுபாட்டில் வியாபாரத்தை முடித்துவிட்டு டாஸ்மார்க் கடையை பூட்டிவிட்டு சென்றுவிட்டனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பொன்னேரி பகுதியில் டாஸ்மார்க் மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக் கடையின் மேற்பார்வையாளராக துரைசாமி என்பவர் பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில் நேற்று இரவு 10 மணிக்கு மேல் மதுபாட்டில் வியாபாரத்தை முடித்துவிட்டு டாஸ்மார்க் கடையை பூட்டிவிட்டு சென்றுவிட்டனர். இந்நிலையில் இன்று காலை அந்த வழியாக வந்தவர்கள் பார்த்தபோது டாஸ்மாக் கடையின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து இருந்துள்ளது.

    அதை பார்த்தவர்கள் இது குறித்து டாஸ்மார்க் கடை மேற்பார்வையாளருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்த துரைசாமி இது குறித்து பரமத்திவேலூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கசாமி தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து வந்து பார்த்தபோது கடைக்குள் வைத்திருந்த ரூ. 43 ஆயிரம் பணம் மற்றும் மது பாட்டில்கள் எடுத்துச் சென்றிருப்பது தெரிய வந்தது. அதன் அடிப்படையில் டாஸ்மாக் கடையில் பணம் மற்றும் மதுபாட்டில்களை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் உள்ள பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வருமான வரி சோதனை நடைபெறும் வளாகத்தில் கலை, அறிவியல், பல் மருத்துவம், பாலிடெக்னிக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.
    • கல்லூரி தாளாளர் வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் எளையாம்பாளைத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள தனியார் கல்லூரியில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.

    வருமான வரி சோதனை நடைபெறும் வளாகத்தில் கலை, அறிவியல், பல் மருத்துவம், பாலிடெக்னிக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. தனியார் கல்லூரி வளாகத்தில் காலை முதலே வருமான வரி சோதனை நடைபெறுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 10 கார்களில் வந்த அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    குமாரமங்கலத்தில் உள்ள கல்லூரியின் தாளாளர் கருணாநிதியின் வீட்டிலும் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.

    வரி ஏய்ப்பு செய்த புகாரின் பேரில் சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ×